Published : 19 May 2025 07:23 AM
Last Updated : 19 May 2025 07:23 AM

ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இயங்கும் அமெரிக்க தயாரிப்பு - ‘விபாட்’ ட்ரோன்கள் இந்தியா வந்தன

செங்குத்தாக மேல் எழும்பும் வி-பாட் ட்ரோன்கள்.

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன விபாட் ட்ரோன்கள் இந்தியா வந்துள்ளன. இவற்றால் செங்குத்தாக மேலெழும்பவும், தரையிறங்கி தாக்குதல் நடத்தவும் இயலும். இதனால் இவை வி -டால் ட்ரோன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இனிமேல் போர்க்களத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் ட்ரோன்கள்தான் ஆதிக்கம் செலுத்தும். இதனால் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட விடால் மற்றும் விபாட் ட்ரோன்கள் இந்தியா வந்துள்ளன. இவற்றின் மூலம் போர்க்களத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை உக்ரைன் பயன்படுத்தியது. இதற்கு போட்டியாக ரஷ்யா சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் காமிகாசே ட்ரோன்களை அறிமுகம் செய்தது.

‘டுவிக்’ என அழைக்கப்படும் இந்த ட்ரோன்கள் எதிரிகளின் கவச வாகனங்களை இதர தளவாடங்களையும் அழிக்கும். இந்த டே்ரோன் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் 30 கி.மீ தூரம் வரை பறந்த செல்லும். முழுவதும் தானியங்கி முறையில் செயல்படும் இந்த ட்ரோன்கள், ஜாமர்கள் மூலம் ஜிபிஎஸ் மேற்றும் தகவல் தொடர்பு இணைப்பு முடக்கப்பட்டாலும், இலக்குகளை வெற்றிகரமாக தாக்கிவிட்டு திரும்பும்.

இந்த ட்ரோன்களை, எலக்ட்ரானிக் அடிப்படையிலான எதிர்ப்பு ட்ரோன்களால் தடுக்க முடியாது. ட்ரோனின் செயற்கைகோள் அடிப்படையிலான நேவிகேஷன் திறனை தடுக்கும் வகையிலும், ட்ரோனை இயக்குபவருடனான தகவல் தொடர்பை குறைக்கும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் அண்டுரில் மற்றும் ஷீல்டு ஏஐ போன்ற நிறுவனங்கள் வி-பாட் மற்றும் நோவா என்ற ஏ.ஐ தொழில்நுட்ப ட்ரோன்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளன. இந்த ட்ரோன்களில் உள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் காட்சி அடிப்படையிலான நேவிகேஷன் ஆகியவை இலக்குகளை தானாக கண்காணித்து தாக்குதல் நடத்தும்.

இவற்றை தொலைவில் இருந்து இயக்க தேவையில்லை. இந்த ஸ்மார்ட் ட்ரோன்கள் எந்த சூழலையும் சமாளித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் ட்ரோன்கள் தான் போரில் அதிகம் ஈடுபடுத்தப்படும்.

அமெரிக்காவில் எம்க்யூ-35 என அழைக்கப்படும் வி-பாட் ட்ரோன்களால், செங்குத்தாக மேலேழும்பவும், தரையிறங்கவும் முடியும்(வி-டால்) , மேலும் இவை ஆபரேட்டர் இன்றி இயங்கி இலக்குகளை வெற்றிகரமாக தாக்கும். இந்த ட்ரோன்கள் பறந்து செல்லும் பாதையை ஆபரேட்டர் நிர்ணயிக்கத் தேவையில்லை.

தானாக தேர்வு செய்து கொள்ளும். இந்த ட்ரோன்கள் 500 கி.மீ தூரம் சென்றும், இலக்கு பகுதியில் 10 மணி நேரம் பறக்கும் திறன் உடையது. இந்த ட்ரோன்களில் 11.3 கி.லோ எடையுள்ள வெடிபொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இந்த வி-பாட் ட்ரோன்கள் அமெரிக்க போர்க்கப்பல் யுஎஸ்எஸ் மைக்கேல் மான்சூரில் பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x