Published : 18 May 2025 07:28 AM
Last Updated : 18 May 2025 07:28 AM

வீட்டில் நகை கொள்ளையடித்து சாப்பிட்டு விட்டு சென்ற திருடர்கள்

ஏஐ படம்

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத் சாதர்​காட் பகு​தியை சேர்ந்​தவர் ஃபஹி​யுத்​தீன். வியா​பாரி. இவரது மனை​வி தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்​து​வர்​களும் துணைக்கு வீட்​டில் இருந்த தனது வயதான பெற்​றோருக்கு சொல்​லி​விட்​டு, ஃபஹி​யுத்​தீன் மனைவியுடன் இருக்க மருத்​து​வ​மனைக்கு சென்​று​விட்​டார்.

இந்​நிலை​யில், நேற்று முன் தினம் இரவு, கொள்​ளை​யர்​கள் அந்த வீட்​டின் பின்​புற​மாக வீட்​டுக்​குள் குதித்​தனர். அதன் பின்​னர், வீட்​டில் இருந்த முதி​யோரை ஒரு அறை​யில் அடைத்து தாளிட்​டனர். பின்​னர், வீட்​டில் இருந்த 700 கிராம் தங்க நகைகளை பீரோ​வில் இருந்து கொள்​ளை​யடித்​தனர்.

அதன் பின்​னர், பிரிட்ஜில் இருந்த பழங்​கள், திண்​பண்​டங்​களை ருசித்து சாப்​பிட்டு விட்​டு,அதன் பின்​னர் கொள்​ளை​யர்​கள் அங்​கிருந்து தப்பி விட்​டனர். நேற்று அதி​காலை வீட்​டுக்கு வந்த ஃபஹி​யுத்​தீன் தனது பெற்​றோரின் கூச்​சலும், அழுகை​யை​யும் கேட்டு அதிர்ச்சி அடைந்து அறை​யின் கதவை திறந்து நடந்​தவற்றை கேட்​டறிந்​தார். அதன் பின்​னர், இது தொடர்​பாக சாதர்​காட் போலீ​ஸாரிடம் புகார் அளித்​தார். இதை தொடர்ந்து போலீ​ஸார் வழக்கு பதிந்​து வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x