பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் பற்றி தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் சன்மானம்!

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் பற்றி தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் சன்மானம்!
Updated on
1 min read

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு, ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும். தகவல் அளிப்பவர்களின் அடையாளம் கண்டிப்பாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

2019 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பஹல்காம் தாக்குதல் மிகக் கொடூரமான தாக்குதல் சம்பவம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு, ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும். தகவல் அளிப்பவர்களின் அடையாளம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

'பயங்கரவாதமற்ற காஷ்மீர்' என்ற வாசகத்தைக் கொண்ட சுவரொட்டிகள், ஜம்மு-காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், இந்த பயங்கரவாதிகள் மூன்று பேரின் புகைப்படங்களை அந்நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. அதோடு, அடில் ஹுசைன் தோக்கர், அலி பாய் மற்றும் ஹாஷிம் மூசா ஆகிய மூன்று பயங்கரவாதிகளின் பெயர்களையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தது.

அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ சர்வதேச அளவில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in