பாக். தாக்குதலால் இடம்பெயர்ந்த மக்களுடன் கிரிக்கெட் விளையாடிய உமர் அப்​துல்லா

பாக். தாக்குதலால் இடம்பெயர்ந்த மக்களுடன் கிரிக்கெட் விளையாடிய உமர் அப்​துல்லா
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ​பாகிஸ்​தான் தாக்​குதலை​யடுத்து எல்லை பகுதிகளில் பாது​காப்பு கருதி பொது​மக்​களுக்​காக நிவாரண முகாம்​கள் ஜம்மு மற்​றும் சம்​பலில் அமைக்​கப்​பட்​டுள்​ளன. நேற்று அந்த முகாம்​களை பார்​வை​யிட சென்ற ஜம்​மு-​காஷ்மீர் முதல்​வர் உமர் அப்​துல்லா அங்​கிருந்த குழந்​தைகளு​டன் கிரிக்​கெட் விளை​யாடி மகிழ்ந்​தார்.

பாகிஸ்​தான் ட்ரோன் மற்​றும் குண்​டு​களை வீசி தாக்​கியதையடுத்து சம்பா முகாமில் பொது​மக்​கள் தங்​கவைக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களை நேரில் சந்​தித்து நலம் விசா​ரிக்க சென்ற உமர் அப்​துல்லா அப்​போது அங்கு கிரிக்​கெட் விளை​யாடிக் கொண்​டிருந்த சிறு​வர்​களு​டன் அவரும் இணைந்து கொண்​டார். இதுதொடர்​பான வீடியோ காட்​சிகள் சமூக வலை​தளங்​களில் வைரலாகி உள்​ளன.

ஜம்மு மற்​றும் பூஞ்ச் மாவட்​டங்​களில் ட்ரோன், ஏவு​கணை மூலம் தாக்​குதல் நடத்​திய பாகிஸ்​தானை கடுமை​யாக கண்​டித்​துள்ள உமர் அப்​துல்​லா, நாங்​கள் இத்​தகைய சூழ்​நிலையை உரு​வாக்க காரண​மாக இருக்​க​வில்லை என்​று தெரி​வித்​துள்​ளார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in