பாக். திரைப்படங்கள், சீரிஸ்களை நீக்க ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

பாக். திரைப்படங்கள், சீரிஸ்களை நீக்க ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
Updated on
1 min read

புதுடெல்லி: ஓடிடி தளங்களில் உள்ள பாகிஸ்தானை மையமாகக் கொண்ட திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை உடனடியாக நீக்க மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளைக் குறிவைத்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளதால், ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதாவது, அனைத்து ஓடிடி தளங்களிலும் பாகிஸ்தானை மையமாகக் கொண்ட திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், பாடல்கள் மற்றும் பாட்காஸ்ட்களை மத்திய அரசு தடை செய்துள்ளது.

ஏற்கெனவே, பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தேசப் பாதுகாப்பு நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in