“தேசமே முதலில்…” - பிஹாரில் போர்க்கால ஒத்திகையில் பங்கேற்க திருமண கொண்டாட்டத்தை ரத்து செய்த மணமகன்

மணமகன்  சுஷாந்த் குஷ்வாஹா
மணமகன் சுஷாந்த் குஷ்வாஹா
Updated on
1 min read

பாட்னா: நாடு முழுவதும் இன்று மேற்கொள்ளப்பட்ட போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்பதாக தனது திருமண கொண்டாட்டங்களை பிஹாரைச் சேர்ந்த மணமகன் ஒருவர் ரத்து செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிஹாரின் பூர்னியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஷாந்த் குஷ்வாஹா. இவருக்கு புதன்கிழமை (மே 07) திருமணம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அராரியா மாவட்டத்தில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள மணப்பெண்ணில் வீட்டுக்கு "பராத்" எனப்படும் திருமண கொண்டாட்டத்துக்காக சுஷாந்த் புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், தனது பகுதியில் நடைபெற்ற போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்பதாக அவர் தனது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மணப்பெண்ணை இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்தார்.

இது குறித்து கூறிய சுஷாந்த், “இன்று என்னுடைய திருமணம், ஆனால் அது மட்டுமே எனக்குமகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் அல்ல. இன்று, இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அவர்களின் பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த ஒத்திகையில் நான் ஒரு சிறிய அங்கமாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையான தருணம். தேசம்தான் முதலில். ராணுவ வீரர்கள் பெரும்பாலும் தங்கள் திருமணம் நடக்கும் இடத்தை விட்டு எல்லைகளில் சண்டையிடச் செல்வார்கள். சூழ்நிலை தேவைப்பட்டால், நாமும் அதைச் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கல்பாக்கம் உட்பட நாடு முழுவதும் தாக்குதல் அபாயம் உள்ள 259 மாவட்டங்களில் இன்று போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in