ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தில் விழுந்து 3 வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தில் விழுந்து 3 வீரர்கள் உயிரிழப்பு
Updated on
1 min read

ரம்பன்: ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் ராணுவ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு ராணுவத்தினர் தங்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். ரம்பன் மாவட்டத்தில் பேட்டரி சாஸ்மா என்ற இடம் அருகே நேற்று காலை 11.30 மணியளவில் ராணுவ வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து 700 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் ராணுவ லாரியில் பயணம் செய்த அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மான் பகதூர் என்ற 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

விபத்து நடந்த இடத்தில் ராணுவத்தினர், போலீஸார், மாநில பேரிடர் மீட்பு குழுவினர், உள்ளூர் மக்கள் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காஷ்மீரின் ரம்பன் மாவட்ட நெடுஞ்சாலையில் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in