“நீங்கள் விரும்புவது நிச்சயமாக நடக்கும்” - பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் ராஜ்நாத் சிங் உறுதி!

“நீங்கள் விரும்புவது நிச்சயமாக நடக்கும்” - பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் ராஜ்நாத் சிங் உறுதி!
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நீங்கள் விரும்புவது நிச்சயமாக நடக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது: “நமது நாட்டைத் தாக்கத் துணிபவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு. பிரதமர் நரேந்திர மோடியின் பணி தர்மம் மற்றும் விடாமுயற்சியை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நீங்கள் விரும்புவது நிச்சயமாக நடக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

இந்த சம்பவத்தை நிகழ்த்தியவர்களை மட்டுமல்ல, திரைக்குப் பின்னால் அமர்ந்து இந்திய மண்ணில் இதுபோன்ற கொடூரமான செயல்களைச் செய்ய சதித் திட்டம் தீட்டியவர்களையும் நாங்கள் விடமாட்டோம். பாதுகாப்பு அமைச்சராக, வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவதும், நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதும் எனது பொறுப்பு ஆகும்” இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

முன்னதாக இன்று (மே 4) விமானப்படைத் தளபதி ஏர்மார்ஷல் அமர் பிரீத் சிங், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். நேற்று (சனிக்கிழமை) பிரதமர் மோடியை கடற்படையின் தலைமை அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி சந்தித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in