பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பலத்தை காட்டும் இந்திய கடற்படை

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பலத்தை காட்டும் இந்திய கடற்படை
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியா- பாகிஸ்தான் பதற்றத்துக்கு இடையே இந்திய கடற்படை தனது பலத்தை காட்டி வருகிறது.

காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்தியது, வாகா எல்லையை முடியது, பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பதிலடி கொடுக்கும் முடிவை எடுப்பதில் முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்து விட்டார் பிரதமர் மோடி. இதையடுத்து கடற்படை கப்பல்கள் அரபிக் கடல் பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. விமானப்படை விமானங்கள் நெடுஞ்சாலைகளை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இந்திய கடற்படையின் ஊடக பிரிவு புதிய படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்ப்பல், துருவ ரக ஹெலிகாப்டர், ஸ்கார்பின் ரக நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஒன்றாக அணிவகுத்துள்ளன. (கடலிலும், கடலுக்கு மேலேயும், கடலுக்கு கீழேயும்) - கடற்படையின் மூன்று சக்திகள் என அந்த படத்துக்கு தலைப்பு கொடுக்கப்ப்டடுள்ளது. இந்தப்படம் விரைவாகப் பரவியது.

கடற்படை கப்பல்கள் எல்லாம் போருக்கு தயார் நிலையல் இருக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை வெளிப்படுத்தும் வகையில் இந்திய கடற்படை இந்த படத்தை வெளியிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in