பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேச துரோகம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேச துரோகம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய நபர் அடித்து கொல்லப்பட்ட நிலையில், அம்மாநில முதல்வர் சித்தராமையா, 'பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிடுவது தேச துரோகம்' என தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின்போது 30 வயதான நபர் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என முழக்கம் எழுப்பியதாக கூறப்படுகிறது. அவரை 20க்கும் மேற்பட்டோர் கும்பலாக தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 20 பேரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று செய்தியாளர்கள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியது தேச துரோகம். அந்த நாட்டுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அது நமது நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகம் ஆகும். அதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் இருக்காது.

அதேவேளையில் பாகிஸ்தானை எதிரியாக சித்தரித்து இங்கு சிலர் அரசியல் செய்வதையும் மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in