Published : 29 Apr 2025 06:31 AM
Last Updated : 29 Apr 2025 06:31 AM
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய 10 மணி முதல் 12 மணி நேரம் வரை ஆகிறது. பக்தர்களின் கூட்டத்தை கவனத்தில் கொண்டு, வரும் மே 1-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை தரிசனம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது எனவும் நேரில் வரும் விஐபி பக்தர்களுக்கு வழக்கம்போல் விஐபி பிரேக் தரிசனம் அமல்படுத்தப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்த விஐபி பிரேக் தரிசனத்தை வெள்ளோட்டமாக மே 1 முதல் காலை 6 மணிக்கு அனுமதிக்கலாம் எனவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
மே மாத விசேஷங்கள்: மே 1-ம் தேதி அனந்தாழ்வார் ஜெயந்தி தொடக்கம், 2-ம் தேதி ராமானுஜர் ஜெயந்தி மற்றும் ஸ்ரீ சங்கரர் ஜெயந்தி, 6 முதல் 8-ம் தேதி வரை பத்மாவதி திருக்கல்யாணம், 10-ம் தேதி அனந்தாழ்வார் சாத்துமுறை, 11-ம் தேதி நரசிம்மர் ஜெயந்தி மற்றும் தரிகொண்டா வெங்கமாம்பாள் ஜெயந்தி, 12-ம் தேதி கூர்ம ஜெயந்தி மற்றும் அன்னமாச்சாரியார் ஜெயந்தி, 12-ம் தேதி பவுர்ணமி கருட சேவை, 14-ம் தேதி பராசர பட்டர் வருட திருநட்சத்திரம், 22-ம் தேதி அனுமன் ஜெயந்தி, 31-ம் தேதி நம்மாழ்வார் உற்சவம் தொடக்கம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT