நீதிபதியை மீண்டும் பயிற்சிக்கு அனுப்பிய அலகாபாத் உயர் நீதிமன்றம்

நீதிபதியை மீண்டும் பயிற்சிக்கு அனுப்பிய அலகாபாத் உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தில் நீதிபதி ஒருவரை தீர்ப்பு எழுத தகுதி இல்லை எனக் கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் மீண்டும் அவரை பயிற்சிக்கு அனுப்பி வைத்த விநோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

கான்பூர் நகரைச் சேர்ந்தவர் முன்னி தேவி. குத்தகை தொடர்பான இவரது வழக்கு ஒன்றில் கூடுதல் காரணங்களைச் சேர்க்க கோரிய மனுவை கூடுதல் மாவட்ட நீதிபதியான அமித் வர்மா தன்னிச்சையான முறையில் மூன்றே வரி உத்தரவில் தள்ளுபடி செய்தார். அத்துடன் மனு ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணம் குறித்து அந்த நீதிபதி ஒரு வரி கூட தனது தீர்ப்பில் எழுதவில்லை.

இதற்கு முன்பும் இதே நீதிபதி இதே போன்ற தவறை செய்ததாக கூறிய முன்னி தேவி தனக்கு நிவாரணம் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடினார். அவரது ரிட் மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி நீரஜ் திவாரி , “ கான்பூர் நகர கூடுதல் மாவட்ட நீதிபதி அமித் வர்மா தீர்ப்பு எழுதத் தகுதியற்றவர் என்பது இந்த நீதிமன்றத்தின் உறுதியான கருத்து. எனவே, அவரை லக்னோவில் உள்ள நீதித்துறை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 3 மாதங்கள் பயிற்சி பெற வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in