இந்துக்கள் கடையில் பொருள் வாங்குங்கள்: மகாராஷ்டிரா அமைச்சர் சர்ச்சை பேச்சு

இந்துக்கள் கடையில் பொருள் வாங்குங்கள்: மகாராஷ்டிரா அமைச்சர் சர்ச்சை பேச்சு
Updated on
1 min read

‘‘கடைகளில் பொருட்களை வாங்கும் முன் கடைக்காரரிடம் அவரது மதம் என்ன என்று கேட்டு அனுமன் சலிசாவை கூறச் சொல்லுங்கள்’’ என மகாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானே கூறியுள்ளார்.

காஷ்மீரின் பஹல்மாமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், சுற்றுலா பயணிகளிடம் மதம் என்ன? என்று கேட்டு இஸ்லாமிக் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ‘கல்மா’ வை கூறும்படி கூறியுள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள தபோலி நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மகாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானே பேசியதாவது:

காஷ்மீரில் இந்துக்களை சுட்டுக் கொல்வதற்கு முன் மதம் என்ன? என தீவிரவாதிகள் கேட்டுள்ளனர். அதேபோல் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு முன் கடைக்காரரிடம் அவரது மதம் என்ன? என இந்துக்கள் கேட்க வேண்டும். அவர்கள் இந்து என பொய் சொல்லலாம். அவரிடம் அனுமன் சலிசாவை கூறும்படி சொல்லுங்கள். அவருக்கு அனுமன் சலிசா தெரியவில்லை என்றால் அவரிடம் பொருட்கள் வாங்காதீர்.

முகலாய மன்னர் அவுரங்கசீப் தனது தந்தை மற்றும் சகோதரனை கூட விட்டுவைக்கவில்லை. அவர்கள் தந்தையும், சகோதரனையும் மதிக்காத போது உங்களை எப்படி மதிப்பர். அவர்களிடம் நீங்கள் பொருட்கள் வாங்கி அவர்களை ஏன் பணக்காரர்கள் ஆக்க வேண்டும்? ஆகையால் எப்போதும் கடைக்கு சென்றாலும், இந்து கடையில் பொருட்கள் வாங்குங்கள். இவ்வாறு நிதேஷ் ரானே கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in