

தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டுள்ளது என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூறினார். பிஹார் மாநிலம், மதுபானியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் நிதிஷ் குமார் பேசுகையில், “பஹல்காமில் நடந்த தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது கொடூர செயலை நாம் அனைவரும் கண்டித்து வருகிறோம். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டுள்ளது” என்றார்.
நிதிஷ் குமார் மேலும் பேசுகையில், “எதிர்க்கட்சியினருடன் சேர்ந்ததன் மூலம் கடந்த காலங்களில் தவறு செய்து விட்டேன். இனி தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு செல்ல மாட்டேன்.
2025-ம் ஆண்டுக்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி பாட்னாவில் நடைபெற உள்ளது. இதனை மே 4-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்க வேண்டும். இந்த முக்கிய நிகழ்வு பிஹாரில் நடத்தப்படுவது மிகுந்த திருப்தி அளிக்கிறது" என்றார்.
ராஜீவ் சந்திரசேகர், கேரள பாஜக தலைவர் - ராபர்ட் வதேரா, கேரள எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி ஆகியோர் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக ஏன் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. தீவிரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
ராபர்ட் வதேரா, சோனியா காந்தி மருமகன் - இந்தியாவில் இந்து-முஸ்லிம் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் முஸ்லிம்கள் பலவீனமாக உணர்கிறார்கள் என்ற செய்தியை பிரதமர் நரேந்திர மோடிக்கு உணர்த்துவதற்காகவே காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.