தீவிரவாதிகளுடன் மோதல்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர் உயிரிழப்பு

தீவிரவாதிகளுடன் மோதல்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர் உயிரிழப்பு

Published on

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் துடு பசந்த்கர் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் நேற்று அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார். பிறகு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் ஹவில்தார் ஜான்டு அலி ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டம், டாங்மார்க் பகுதியில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டத்தை தொடர்ந்து அங்கு மோதல் ஏற்பட்டது. அன்று இரவு பாரமுல்லாவின் உரி நலா பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவலை ராணுவம் முறியடித்தது. அப்போது 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் 24 மணி நேரத்தில் 3-வது முறையாக நேற்று பசந்த்கர் பகுதியில் மோதல் ஏற்பட்டது. அங்கு தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடர்வதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in