

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் நேற்று ஜெய்ப்பூரில் இருந்து வாஷிங்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் தனது 4 நாள் அரசுமுறைப் பயணத்தை கடந்த திங்கட்கிழமை தொடங்கினார். டெல்லியில் அக் ஷர்தாம் கோயிலுக்கு சென்றுவந்த அவர், பிறகு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் அன்று இரவு ஜெய்ப்பூர் வந்தனர்.
மறுநாள் இங்குள்ள ஆம்பர் கோட்டைக்கு சென்றுவந்த வான்ஸ், ஒரு நிகழ்ச்சியில் இந்தியா- அமெரிக்கா உறவுகள் குறித்து பேசினார். புதன்கிழமை ஆக்ரா சென்று தாஜ்மகாலை பார்வையிட்டார்.
இந்நிலையில் நேற்று அவர் தனது இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு ஜெய்ப்பூரில் இருந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனி விமானத்தில் வாஷிங்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்.