நேஷனல் ஹெரால்ட் கொள்ளை வாசகம் எழுதப்பட்ட பையுடன் வந்த பாஜக எம்.பி.

நேஷனல் ஹெரால்ட் கொள்ளை வாசகம் எழுதப்பட்ட பையுடன் வந்த பாஜக எம்.பி.
Updated on
1 min read

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை குறிவைத்து " நேஷனல் ஹெரால்ட் கொள்ளை" என்று எழுதப்பட்ட பையுடன் நாடாளுமன்றத்துக்கு வந்த பாஜக எம்பி பன்சூரி ஸ்வரஜால் பரபரப்பு ஏற்பட்டது.

நேஷனல் ஹெரால்டு தொடர்புடைய பண மோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக கூறி அவர்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதற்கு, காங்கிரஸ் கட்சி கடும்எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், சோனியா காந்தி குடும்பத்தின் மோசடியை வெளிப்படுத்தும் விதமாக பாஜக எம்பி. பன்சூரி ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற " ஒரே நாடு ஒரே தேர்தல்" கூட்டத்துக்கு வந்தபோது அவர் தோளில் அணிந்திருந்த பையில் "நேஷனல் ஹெரால்டு கொள்ளை" என்று எழுதப்பட்டிருந்தது. இது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது.

இதேபோன்று, கடந்த டிசம்பர் மாதம், பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்துக்கு வந்தபோது " பாலஸ்தீனம்" என்று எழுதப்பட்ட பையை பயன்படுத்தினார். அதே பாணியில், பிரியங்காவின் குடும்பத்துக்கு பதிலடி கொடுக்கவே பன்சூரி இவ்வாறு நடந்து கொண்டதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in