Last Updated : 30 Jul, 2018 12:19 PM

 

Published : 30 Jul 2018 12:19 PM
Last Updated : 30 Jul 2018 12:19 PM

ஐஆர்சிடிசி ஹோட்டல் ஊழல் வழக்கு: லாலு பிரசாத், மனைவி, மகனுக்கு நீதிமன்றம் சம்மன்

ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் இவ்வழக்கில் குற்றஞ்சாட்ட மற்றும் சிலருக்கும் டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 31க்குள் அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சம்மனை அனுப்பியுள்ளது.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கு எதிராகவும் போதுமான சான்றுகள் இருப்பதாகக் கூறி கடந்த ஏப்ரல் 16 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்போரேஷன் (ஐஆர்சிடிசி) ஹோட்டல் ஊழல் தொடர்பாக, லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி, இவர்களுடன் டெல்லியில் இயங்கிவரும் ஒரு தனியார் நிறுவனம், ஒரு தனியார் ஷோட்டலின் இரண்டு இயக்குநர்கள், இது தவிர ஐஆர்சிடிசியின் நிர்வாக இயக்குநர், ஒரு எம்பி, ஐஆர்சிடிசியில் பல்வேறு துறைகளில் பணியாற்றிவரும் மற்ற உயரதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ரயில்வே ஓட்டல் பராமரிப்பில் ஊழல்2004 முதல் 2009 வரை லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ராஞ்சி மற்றும் பூரி ஆகிய இடங்களில் ஐஆர்சிடிசி ஹோட்டல்களைப் பராமரிப்பதற்காக ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒரு ஒப்பந்தத்தை அனுமதித்ததில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்திய ரயில்வேயின் இரு  ஹோட்டல்களை பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை மேற்கொள்ள சுஜாதா ஹோட்டல் எனும் தனியார் லிமிட்டெட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டதன் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் பரிமாற்றப்படுவதற்கான சதி திட்டம் தீட்டியதாக இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x