பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்துக் கொள்ள முடியாது: ஷபானா அஸ்மி

பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்துக் கொள்ள முடியாது: ஷபானா அஸ்மி
Updated on
1 min read

புளோரிடாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மற்றும் அவர் மனைவியும் நடிகையுமான ஷபானா அஸ்மி பங்கேற்றனர்.

’மிஜ்வான்’ என்னும் பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் ஷபானா அஸ்மி, "பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்துக் கொள்ள முடியாது" என்று கூறினார்.

இவ்விழாவில் அவர் பேசும்போது "இன்று பெண்கள் அரசியல் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மற்ற துறைகளிலும் சாதனை படைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனால், பெண் சிசுக்கொலை இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. கிராமப்புறங்கள் மட்டுமல்லாது, டெல்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களிலும் சிசுக்கொலை நடந்து வருவது மிகுந்த வருத்தமளிக்கிறது.

திருமண வாழ்க்கையில் பல வன்முறைகள் நடப்பதை அறிந்தும், அந்த வாழ்க்கையை வாழ நிர்பந்திப்பதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. ஆண்களுக்கு சமமாக பெண்களையும் நடத்த வேண்டும்

இந்த கொடுமையைத் தடுக்க, பெண்களுக்கு கல்வி கட்டாயம் தேவை. கல்வியின் முக்கியத்துவத்தை பெண்கள், தங்கள் குடுப்பத்தினருக்கும், சுற்றத்தாருக்கும் விளக்க வேண்டும்" என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in