காஷ்மீர் என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு

காஷ்மீர் என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேடுல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வர் மாவட்டத்தில் உள்ள சத்ரு பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் நேற்று முன்தினம் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது.

இந்த சண்டையில் நேற்று முன்தினம் ஒரு தீவிரவாதியும், நேற்று 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்த தீவிரவாதிகள் 3 பேரில் 2 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து ஒரு ஏ.கே. ரக துப்பாக்கி ஒரு எம் 4 ரக துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் இருந்தன. இதையடுத்து இப்பகுதியில் கண்காணிப்பு பணியை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதிகாரி ஒருவர் பலி: ஜம்மு காஷ்மீரில் அக்னூர் பகுதியில் உள்ள எல்லையில் நேற்று தீவிரவாத ஊடுருவல் முயற்சி நடைபெற்றது. இதை இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஜுனியர் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in