வக்பு சட்ட திருத்த மசோதா விவகாரம்: பிஹார் துணை முதல்வர் எச்சரிக்கை

வக்பு சட்ட திருத்த மசோதா விவகாரம்: பிஹார் துணை முதல்வர் எச்சரிக்கை
Updated on
1 min read

வக்பு சட்ட திருத்த மசோதாவை ஏற்க மறுத்தால் சிறைக்கு செல்ல நேரிடும் என்று பிஹார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த மசோதாவை ஏற்கமாட்டோம், அமல்படுத்த மாட்டோம் என்று ஒரு தரப்பினர் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து பிஹார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான விஜய்குமார் சின்ஹா கூறியதாவது:

வக்பு சட்ட திருத்த மசோதாவை ஏற்க மறுத்தால், அமல்படுத்த மறுத்தால் சிறை செல்ல நேரிடும். இது பாகிஸ்தான் கிடையாது, இந்துஸ்தான். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு திருத்த மசோதாவை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதை ஏற்க மறுப்பவர்கள் தேசத்துரோகிகளாக கருதப்படுவார்கள். அத்தகைய நபர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு விஜய் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in