ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Updated on
1 min read

புதுடெல்லி: ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இஸ்ரோவின் அடுத்த தலைமுறை ராக்கெட் உருவாக்கும் பணி தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. இது 90 மீட்டர் உயரமும், அதிகபட்சமாக 1000 டன் எடையும் கொண்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ஏவுதளங்கள் இந்த வகை ராக்கெட்களை விண்ணில் செலுத்த முடியாது. எனவே மூன்றாவது ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரூ.3984.86 கோடி செலவிலான இத்திட்டம் 4 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவையில் விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in