நியூ இந்தியா கூட்டுறவு வங்கி வழக்கு: ரூ.168 கோடி சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு

நியூ இந்தியா கூட்டுறவு வங்கி வழக்கு: ரூ.168 கோடி சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு
Updated on
1 min read

மகாராஷ்டிராவில் நியூ இந்தியா கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய 5 பேரின் ரூ.168 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் (இஓடபிள்யூ) விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரின் ரூ.167.85 கோடி மதிப்பிலான 21 சொத்துகளை பறிமுதல் செய்யவதற்கான அனுமதியை போலீஸாருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ளது. புதிய குற்றவியல் சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் முதல் முறையாக மும்பையில் அந்த சட்டத்தின் கீழ் பறிமுதல் நடவடிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாஜிஸ்திரேட்டிடம் இருந்து பறிமுதல் செய்வதற்கான உத்தரவு கிடைக்கப் பெற்றதையடுத்து மும்பை இஓடபிள்யூ போலீஸார் குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் ரூ.122 கோடி மோசடி செய்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in