Published : 31 Jul 2018 12:45 pm

Updated : 31 Jul 2018 14:49 pm

 

Published : 31 Jul 2018 12:45 PM
Last Updated : 31 Jul 2018 02:49 PM

உ.பி.யில் உறுதியானது ‘மெகா’ கூட்டணி: பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் வியூகம்

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் வகையில், அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து ‘மெகா’ கூட்டணியை உறுதி செய்துள்ளன. இதனால் மக்களவை தேர்தலில் அந்த மாநிலத்தில் பாஜக கடும் சவாலை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

உ.பி.யில் தற்போது பாஜக ஆளும் கட்சியாக உள்ள நிலையில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியும் இணைந்து போட்டியிட்டன. இவர்களுடன் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய லோக் தளத்தின் தலைவர் அஜித்சிங்கும் இணைந்ததால் பாஜகவிற்கு தோல்வி ஏற்பட்டது.


வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை தோல்வியடையச் செய்ய இதே வியூகத்துடன் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன. இதுதொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உ.பி.யில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன.

இதில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே மத்தியில் ஆட்சியமைக்கும் சூழல் உள்ளது. எனவே இந்த மாநிலத்தில் பாஜகவை வீழ்த்துவது என்ற ஒன்றை குறிக்கோளுடன் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிந்து வருகின்றன. மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக இந்த கட்சிகள் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நேற்று கூட்டணியை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி பங்கீட்டைப் பொறுத்தவரை, 80 தொகுதிகளில், காங்கிரஸூக்கு 10 தொகுதிகளை ஒதுக்குவது என்றும், சமாஜ்வாதிக்கு 32 இடங்களும், ராஷ்ட்ரிய லோக்தள கட்சிக்கு 3 இடங்களையும் ஒதுக்கீடு செய்ய பரிசீலிக்கப்பட்டுள்ளது. பகுஜன்சமாஜ் கட்சிக்கு 30 இடங்களையும், உதிரிக் கட்சிகளுக்கு 5 இடங்களை பிரித்துக் கொடுப்பது என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. எனினும் தொகுதி பங்கீட்டில் சில சிக்கல்கள் இருப்பதால் அதனை பின்னர் இறுதி செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போட்டியிடுவது என்பதை அந்த கட்சிகள் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.



தவறவிடாதீர்!

    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x