Published : 31 Jul 2018 11:07 AM
Last Updated : 31 Jul 2018 11:07 AM

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் கேரள முதல்வர்

கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவ சிகிச்சைக்காக, அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பினராயி விஜயன் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் மார்ச் 3-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் என்று அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. சிகிச்சை முடிந்து அவர் பின்னர் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், பினராயி விஜயன் அமெரிக்காவில் மினசோட்டாவில் உள்ள மேயோ கிளினிக்கில் சிகிச்சை பெற இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு தொடர்ந்து 13 நாட்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என தெரிகிறது.

எனினும் அவரது உடல்நலக்குறைவு மற்றும் அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்தியாவில் எடுக்கப்பட்ட சிகச்சை மற்றும் மருத்துவர்களில் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x