கேரளாவில் போதைப் பொருள் பயன்படுத்தும் 10 பேருக்கு எய்ட்ஸ் தொற்று

கேரளாவில் போதைப் பொருள் பயன்படுத்தும் 10 பேருக்கு எய்ட்ஸ் தொற்று
Updated on
1 min read

கேரளாவின் மலப்புரம் மாவட்டம் வளஞ்சேரி பகுதியில் போதைப் பொருள் பயன்படுத்தும் 10 பேருக்கு எய்ட்ஸ் தொற்று கண்டறியப்பட்டுளளது.

இதுகுறித்து மலப்புரம் மாவட்ட மருத்துவ அதிகாரி ஆர்.ரேணுகா நேற்று கூறியதாவது: எச்ஐவி தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ள பாலியல் தொழிலாளிகள், போதைப் பொருள் பயன்படுத்துவோர் உள்ளிட்டோருக்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கு எய்ட்ஸ் தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, வளச்சேரி பகுதியில் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் 9 பேருக்கு எய்ட்ஸ் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் 3 பேர் புலம்பெயர் தொழிலாளர்கள்.

இவர்கள் அனைவரும் போதைப் பொருள் பயன்படுத்தும் ஒரே குழுவை சேர்ந்தவர்கள். ஒரே ஊசியை இவர்கள் பயன்படுத்தியதால் தொற்று பரவியுள்ளது. இவர்களுடன் தொடர்புடைய வேறு யாருக்கேனும் தொற்று பரவியுள்ளதா என கண்டறிய முயன்று வருகிறோம். அனைவரும் உரிய நேரத்தில் சிகிச்சை பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in