கணவரை கொன்ற மீரட் பெண், காதலருக்கு உதவ குடும்பத்தினர் மறுப்பு

கணவரை கொன்ற மீரட் பெண், காதலருக்கு உதவ குடும்பத்தினர் மறுப்பு
Updated on
1 min read

கணவரை கொலை செய்த உத்தர பிரதேசம் மீரட் பெண் மற்றும் காதலருக்கு உதவ குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். இதனால் அரசு வழக்கறிஞரை நியமிக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தர பிரதேசம் மீரட் பகுதியைச் சேர்ந்தவர் சவுரப் ராஜ்புத். லண்டனில் உள்ள சரக்கு கப்பல் நிறுவனத்தில் பணியாற்றினார். இவர் தனது பள்ளித் தோழி மஸ்கன் ரஸ்தோகியை காதலித்து கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முறை, சவுரப் சொந்த ஊர் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் மஸ்கன் ரஸ்தோகிக்கு, மீரட்டில் ஆடிட்டராக பணியாற்றும் ஷாகில் சுக்லாவும் நெருங்கி பழகினர். மகளின் பிறந்தநாளை கொண்டாட கடந்த மாதம் மீரட் வந்த சவுரப் ராஜ்புத்தை கொலை செய்ய மஸ்கன் ரஸ்தோகியும், ஷாகில் சுக்லாவும் திட்டமிட்டனர். அதன்படி கடந்த 4-ம் தேதி சவுரப்புக்கு மயக்கமருத்து கொடுத்து, அவரை கத்தியால் குத்தி மஸ்கன் ரஸ்தோகியும், ஷாகில் சுக்லாவும் கொலை செய்தனர். அவரது உடலை வெட்டி பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு சிமென்டு வைத்து பூசினர்.

அதன்பின் குழந்தையை தாயிடம் விட்டுவிட்டு மஸ்கன் ரஸ்தோகி, ஷாகில் சுக்லாவுடன் சிம்லாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டார். மஸ்கன் ரஸ்தோகி வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் புகார் அளித்தால், அங்கு போலீஸார் சோதன நடத்தி சவுரப் உடலை கண்டுபிடித்தனர். கடந்த 18-ம் தேதி மீரட் திரும்பிய மஸ்கன் ரஸ்தோகி, ஷாகில் சுக்லாவை போலீஸார் கைது செய்து மீரட் சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு உதவ குடும்பத்தினர் யாரும் முன்வரவில்லை. இதனால் தங்களுக்கு அரசு வழக்கறிஞரை ஏற்பாடு செய்யும்படி மஸ்கன் ரஸ்தோகி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானதற்காக அறிகுறிகள் தெரிவதாக சிறை கண்காணிப்பாளர் சர்மா தெரிவித்துள்ளார். அதற்கான சிகிச்சை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in