கேரள பாஜக தலைவராகிறார் ராஜீவ் சந்திரசேகர் 

கேரள பாஜக தலைவராகிறார் ராஜீவ் சந்திரசேகர் 

Published on

திருவனந்தபுரம்: கேரள பாஜக தலைவராக இருக்கும் சுரேந்திரனின் பதவிக் காலம் முடிவடைகிறது. அவர் இந்த பதவியை தொடர விரும் பவில்லை என கட்சி மேலிடத் திடம் தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து மாநில தலை வர் பதவிக்கு தேர்தல் நடத் தப்படுகிறது. இதில் போட்டி யிட முன்னாள் மத்திய அமைச் சர் ராஜீவ் சந்திர சேகர் நேற்று மனுத்தாக்கல் செய்தார். வேறு யாரும் இப்பதவிக்கு போட்டியிட வில்லை. அதனால் அவர் கேரள பாஜக தலைவராக தேர்வு செய் யப்படும் முறையான அறிவிப்பு பாஜக மாநில கவுன்சில் கூட்டத் தில் இன்று அறிவிக்கப்படும்.

இவரது நியமனத்தை பாஜக மத்திய பார்வையாளர் பிரகலாத் ஜோஷி இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் ராஜீவ் சந்திரசேகர் திருவனந் தபுரத்தில் போட்டியிட்டு சசி தரூரிடம் தோல்வியடைந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in