இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்னை தாண்டியது: பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்னை தாண்டியது: பிரதமர் மோடி பெருமிதம்
Updated on
1 min read

நாட்டின் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்னைத் தாண்டி சாதனை படைத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: நாட்டின் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்னை தாண்டியுள்ளது. இது இந்தியாவுக்கு மிகவும் பெருமைமிகு தருணம். இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனை எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா உறுதியுடன் இருப்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. மேலும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சொந்த வளங்களின் மூலம் தன்னிறைவு அடைவதற்கு மத்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு இது ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. இந்த துறையுடன் தொடர்புடைய அனைவரின் அர்ப்பணிப்பையும், கடின உழைப்பையும் இந்த சாதனை பிரதிபலிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி கூறுகையில், “ இந்தியா அதிநவீனதொழில்நுட்பங்கள் மற்றும் திறமையான வழிமுறைகள் மூலம் நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நிலையான மற்றும் பொறுப்பான சுரங்கத்தை இந்த சாதனை உறுதி செய்துள்ளது. இது அதிகரித்து வரும் நமது மின் தேவைக்கு எரிபொருளாக அமையும் என்பதுடன் பொருளாதார வளர்ச்சியை உந்தித்தள்ளும். ஒவ்வொரு இந்தியனின் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்யும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in