ஒடிசாவில் பல கோடி ஊழல் வழக்கில் பிஜேடி தலைவர் ராஜா சக்ரா கைது

ஒடிசாவில் பல கோடி ஊழல் வழக்கில் பிஜேடி தலைவர் ராஜா சக்ரா கைது

Published on

ஒடிசாவில் பல கோடி சுரங்க ஊழல் வழக்கில் பிஜு ஜனதா தளத்தின் (பிஜேடி) இளைஞர் அணி துணைத் தலைவர் சவும்ய சங்கர் சக்ரா என்கிற ராஜா சக்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசாவில் கனிம வளம் மிகுந்த கியோஞ்சர் மாவட்டத்தில் காந்தமர்தன் லோடிங் ஏஜென்சி (ஜிஎம்எல்ஏ) மற்றும் போக்குவரத்து கூட்டுறவு சங்கம் ஒன்றின் செயல்பாட்டில் முறைகேடுகள் நடந்ததாகவும் கூட்டுறவு சங்கத்தில் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக மாநில பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் கடந்த பிப்ரவரியில் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் ராஜா சக்ராவிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து அவரை நேற்று கைது செய்தனர்.

சுரங்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட கிராம மககளின் நலனுக்காக கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டது. இந்த சங்கத்தில் அதன் தலைவரும் செயலாளரும் செல்வாக்குமிக்க உள்ளூர் தலைவர்களுடன் இணைந்து பெரும் தொகையை மோசடி செய்துள்ளனர். இந்த மோசடியில் ராஜா சக்ராவுக்கு தொடர்பு இருப்பதும் அவர் பலன் அடைந்திருப்பதும் உறுதியாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in