நடிகை ரன்யா ராவ் மீதான தங்கக் கடத்தல் வழக்கில் டிஜிபியிடம் விசாரிக்க கர்நாடக அரசு உத்தரவு

நடிகை ரன்யா ராவ் மீதான தங்கக் கடத்தல் வழக்கில் டிஜிபியிடம் விசாரிக்க கர்நாடக அரசு உத்தரவு
Updated on
1 min read

பெங்களூரு: கர்​நாடக போலீஸ் டிஜிபி ராமசந்​திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகை​யு​மான‌ ரன்யா ராவ் (32) துபா​யில் இருந்து 14.8 கிலோ தங்​கம் கடத்தி வந்​த​தாக கடந்த 3ம் தேதி பெங்​களூரு விமான நிலை​யத்​தில் கைது செய்​யப்​பட்​டார்.

இதுகுறித்து வழக்​குப்​ப​திவு செய்த வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​கள் அவரது வீட்​டில் நடத்​திய சோதனை​யில் ரூ.2.67 கோடி ரொக்​கப்​பண​மும், ரூ.2.06 கோடி மதிப்​பிலான தங்க நகைகளும் சிக்​கின‌. இதையடுத்து அதி​காரி​கள் அவரை மார்ச் 24ம் தேதி வரை காவலில் எடுத்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். அப்​போது இந்த தங்​கக் கடத்​தலில் சில முக்​கிய பிர​முகர்​களுக்​கும், பெரிய நகைக்​கடை அதிபர்​களுக்​கும் சர்​வ​தேச தங்க கடத்​தல் கும்​பலுக்​கும் தொடர்பு இருப்​பது தெரிய​வந்​தது.

இதனிடையே சிபிஐ அதி​காரி​கள் ரன்யா ராவ் மீது வழக்​குப்​ப​திவு செய்​து, மும்​பை, பெங்களூரு விமான நிலை​யங்​களில் விசா​ரணையை தொடங்​கி​யுள்​ளனர். இந்நிலையில், ரன்யா ராவிடம் இருந்து தங்​கத்தை வாங்​கிய​தாக பெங்​களூருவை சேர்ந்த நட்​சத்​திர விடுதி உரிமை​யாள​ரு​ம் தொழில​திபரு​மான தருண் கே ராஜை நேற்று கைது செய்​தனர். அவரை வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அலு​வல​கத்​துக்கு கொண்டு சென்று விசா​ரணை மேற்​கொண்​டனர். தருண் கே ராஜூவிடம் விற்​பனை செய்​யப்​பட்ட தங்​கத்தை அதி​காரி​கள் பறி​முதல் செய்​திருப்​ப​தாக​வும் செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன. இந்​நிலை​யில் தங்​கக் கடத்​தல் வழக்​கில் ரன்யா ராவுக்கு அவரது வளர்ப்பு தந்​தை​யும் போலீஸ் டிஜிபி​யு​மான ராமசந்​திர ராவ் உதவிய​தாக தகவல் வெளி​யானது. இதனால் கர்​நாடக அரசு அவரை விசா​ரிக்​கு​மாறு கர்​நாடக சிஐடி (குற்​றப்​பிரிவு புல​னாய்​வு துறை) போலீ​ஸாருக்​கு உத்​தர​விட்​டுள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in