Published : 10 Mar 2025 04:57 AM
Last Updated : 10 Mar 2025 04:57 AM

‘சாவா’ திரைப்படத்தால் வதந்தி பரவுகிறது: ம.பி.யில் நள்ளிரவில் ரகசிய தங்க வேட்டை

போபால்: ம​ராட்​டிய மாமன்​னர் சிவாஜி​யின் மகன் சத்​ரபதி சம்​பாஜி​யின் வாழ்க்கை வரலாற்றை அடிப்​படை​யாகக் கொண்டு பாலிவுட்​டில் கடந்த பிப்​ர​வரி 14-ம் தேதி ‘சா​வா’ என்ற திரைப்​படம் வெளி​யானது.

மராத்​தி​யர்​களிடம் இருந்து தங்​கத்தை கொள்​ளை​யடிக்​கும் முகலாயர்​கள் மத்​திய பிரதேசத்​தின் புர்​கான்​பூர் ஆசிர்​கர் கோட்டை பகு​தி​யில் அவற்றை புதைத்து வைத்​திருப்​ப​தாக திரைப்​படத்​தில் காட்​சிகள் இடம்​பெற்​றுள்​ளன. இதன்​ காரண​மாக ஆசிர்​கர் பகுதி மண்​ணில் தங்க புதையல்​கள் இருப்​ப​தாக மக்​களிடையே காட்​டுத் தீ போன்று வதந்தி பரவி வரு​கிறது.

கடந்த சில வாரங்​களாக நள்​ளிரவு நேரத்​தில் ஆசிர்​கர் பகு​திக்கு ஆண்​கள், பெண்​கள் என நூற்​றுக்​கணக்​கானோர் குவி​ந்து மண்ணை அரித்து தங்கம் கிடைக்​கிறதா என்று தேடு​கின்​றனர். இதுபோல் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x