

புதுடெல்லி: பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நிதி திரட்டுவதில் இந்தியா 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது.
டிராக்ஸ் நிறுவனத்தின் ஆய்வுப்படி, இந்தியாவில் பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. இது மொத்த ஸ்டார்ட்-அப்களில் 7.5% ஆகும். பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்-அப்கள் அதிக அளவில் செயல்படும் நகரங்களில், தகவல் தொழில்நுட்பத் தலைநகரமான பெங்களூரு முதலிடம் வகிக்கிறது.
இந்நிலையில், பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நிதி திரட்டுவதில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா 2-ம் இடம் இடத்திலும் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் இதுவரை ரூ.2.26 லட்சம் கோடி நிதி திரட்டி உள்ளன. இதில் கடந்த 2021-ல் மட்டும் அதிகபட்சமாக ரூ.55 ஆயிரம் கோடி திரட்டி உள்ளன. அதிக நிதி திரட்டிய நகரமாக பெங்களூரு உள்ளது. மும்பை, டெல்லி அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.