ரயில்வே கூலித் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவேன்: ராகுல் காந்தி உறுதி

ரயில்வே கூலித் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவேன்: ராகுல் காந்தி உறுதி

Published on

ரயில்வே கூலித் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவேன் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: சில நாட்களுக்கு முன்பு டெல்லி ரயில் நிலையத்தில் கூலித் தொழிலாளர்களை மீண்டும் சந்தித்து பேசினேன். அப்போது அவர்கள் டெல்லி ரயில் நிலையத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பியதை தெரிவித்தனர். அப்போது 18 பேர் படுகாயம் அடைந்து இறந்தனர். நெருக்கடியான நேரங்களிலும் அவர்கள் பயணிகளுக்கு உதவுகின்றனர். ஆனால், அவர்களுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை. சில நாட்களில் சாப்பிடுவதற்கு கூட பணம் கிடைப்பதில்லை என கூலித் தொழிலாளர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை எடுத்து கூறினர். அவர்களின் கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்துவேன். அவர்களின் உரிமைகளுக்காக நான் முழு வீச்சில் போராடுவேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in