

ஹைதராபாத்: ஹைதராபாத் பல்கலைக்கழகம் சார்பில் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) ஊழியர்களின் உடல்நலம் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 2023 ஜூலை மற்றும் 2024 ஜூலைக்கு இடைப்பட்ட காலத்தில் ஹைதராபாத்தில் பணிபுரியும் 345 ஊழியர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 80 சதவீதம் பேருக்கு மெட்டபாலிக் டிஸ்பங்சன்-அசோசியேட்டடு பேட்டி லிவர் டிசீஸ் (எம்ஏஎப்எல்டி) கல்லீரல் கொழுப்பு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இது நீரிழிவு, இதய கோளாறு, சீறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய்களை உருவாக்க வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. சர்க்கரை அதிகம் உள்ள பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பதுடன் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.