தேர்தல் வருவதால் கேரள காங்கிரஸார் ஒற்றுமையுடன் செயல்பட ராகுல் வலியுறுத்தல்

தேர்தல் வருவதால் கேரள காங்கிரஸார் ஒற்றுமையுடன் செயல்பட ராகுல் வலியுறுத்தல்
Updated on
1 min read

புதுடெல்லி: கேரள சட்டப்​பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலை​யில், காங்​கிரஸ் கட்சி​யினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்​டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

இதற்காக அவர், கேரள காங்​கிரஸ் தலைவர்​களுடன் நிற்​கும் பழைய புகைப்​படத்தை பகிர்ந்து “ஒளிமையமான எதிர்​காலத்தை நோக்கி, அவர்கள் ஒன்றிணைந்து நிற்​கிறார்​கள்” என்ற கருத்தை பதிவிட்​டுள்​ளார். காங்​கிரஸ் கட்சி உயர்​மட்ட தலைவர்கள் அடங்கிய கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘‘காங்​கிரஸ் கட்சி தலைவர்கள் அரசியல் வியூ​கத்தை கவனத்​தில் கொள்ள வேண்​டும். கட்சி கொள்​கைக்கு முரணான அறிக்கைகளை வெளி​யிடுவதை தவிர்க்க வேண்​டும்” என்று வலியுறுத்​தி​யிருந்​தார். பிரதமர் மோடி, கேரள இடதுசாரி அரசு ஆகியவற்றை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பாராட்டி வரும் நிலையில் ராகுல் இவ்வாறு கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in