அமிர்தசரஸ் விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

அமிர்தசரஸ் விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

Published on

அமிர்தசரஸ்: மலேசியாவில் இருந்து பஞ்சாப் வந்த விமான பயணியிடம் ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் விமான நிலையத்தில், மலேசியாவில் இருந்து வந்த மன்தீப் சிங் என்ற பயணியிடம் கடந்த 26-ம் தேதி சோதனையிடப்பட்டது. அவர் கொண்டுவந்த பையில் 8.17 கிலோ போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு சுமார் 8.17 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பயணி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

400 கிராம் தங்கம் பறிமுதல்: சிங்கப்பூரில் இருந்து வந்த மற்றொரு பயணியிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 400 கிராம் எடையுள்ள தங்க செயின் மற்றும் வளையல் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.35.60 லட்சம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in