பட்டியலின மக்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பட்டியலின மக்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Updated on
1 min read

பட்டியலின மக்களுக்கு எதிரான மனநிலையில் பாஜக செயல்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பட்டியலின சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் அரசியலமைப்பு சட்ட அமைப்புகளில் ஒன்றாகும். ஆனால் ஆணையத்தின் இரு முக்கிய பதவிகள் கடந்த ஓராண்டாக காலியாக உள்ளன. இதன்மூலம் ஆணையம் பலவீனப்படுத்தப்பட்டு உள்ளது.

சமூக அநீதிகளை எதிர்கொள்ளும் பட்டியலின மக்களுக்காக எஸ்சி தேசிய ஆணையமே குரல் கொடுக்க வேண்டும். இப்போது பட்டியலின மக்கள் அளிக்கும் புகார்கள் குறித்து யார் நடவடிக்கை எடுப்பார்கள்? இதற்கு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்.

மத்தியில் ஆளும் பாஜக, பட்டியலின மக்களுக்கு எதிரான மனநிலையில் செயல்படுகிறது. ஆணையத்தின் முக்கிய பதவிகள் உட்பட அனைத்து காலியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். அப்போதுதான் பட்டியலின மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in