ஜன்னல் வழியாக ரயில் பயணிகள் மீது தண்ணீர் ஊற்றிய வாலிபர் சிக்கினார்

ஜன்னல் வழியாக ரயில் பயணிகள் மீது தண்ணீர் ஊற்றிய வாலிபர் சிக்கினார்
Updated on
1 min read

புதுடெல்லி: ரயில் பயணிகள் மீது ஜன்னல் வழியாக தண்ணீர் ஊற்றிய நபர் போலீஸாரிடம் சிக்கினார். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது.

ரயில் பயணிகளிடம் சிலர் அத்து மீறும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. பிரயாக்ராஜ் வழியாக செல்லும் ரயில்கள் சேதப்படுத்தப்பட்டது, பயணிகளிடம் சிலர் அத்து மீறிய வீடியோ காட்சிகள் வைரலாக பரவின.

இந்நிலையில் ரயில்வே நடைமேடையில் நின்று கொண்டிருக்கும் நபர் ஒருவர், நகர்ந்து சென்று கொண்டிருக்கும் ரயிலின் ஜன்னல் வழியாக பயணிகள் மீது தண்ணீர் ஊற்றி அத்து மீறியுள்ளார். இதைபார்த்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் அத்து மீறி நடந்து கொண்ட வாலிபரை பிடித்துச் தாக்கினர். போலீஸார் இழுத்துச் செல்லும்போது கூட அந்த நபர் வருத்தப்படாமல் சிரித்துக் கொண்டிருந்தார்.

இதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் பகிர்ந்தார். இளைஞரின் அத்துமீறலை கண்டித்த பலர், போலீஸாரின் துரித நடவடிக்கையை பாராட்டினர். இது போன்ற நபர்களின் போட்டோக்களை, பத்திரிகைகளிலும், போஸ்டர்களிலும் வெளியிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in