

காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடையவர் என மேலும் ஒரு இளைஞரை பஞ்சாப் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பாகிஸ்தானில் முகாமிட்டு செயல்படும் தீவிரவாத அமைப்பு களின் மையங்கள் ஜம்முவில் செயல்படுவதாக தகவல் தெரிந்து நடவடிக்கை எடுத்த பஞ்சாப் போலீஸார், 2 காலிஸ்தான் ஆதரவு இயக்க தீவிரவாதிகளை திங்கள்கிழமை கைது செய்தனர். இதே இயக்கத்துடன் தொடர்புடையவர் என 3-வது நபரையும் கைது செய்தனர்.
3 இளைஞர்களை பஞ்சாப் போலீஸார் கைது செய்த தகவலை ஜம்மு பிரிவு காவல்துறை தலைவர் ராஜேஷ்குமார் தெரிவித் தார். மேலும் விசாரணை நடப்ப தாகவும் அவர் சொன்னார்.
ஜம்மு போலீஸாருடன் இணைந்து பஞ்சாப் காவல்துறை யினர் திங்கள்கிழமை ஆர்எஸ்புரா பகுதியில் நடத்திய சோதனை யில் மீரான் சாஹிப்பை சேர்ந்த கரண்ஜித் சிங், ஹர்பிரீத்சிங் ஆகியோரை கைது செய்தனர். மூன்றாவதாக ஸ்வரண் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
ஜம்முவில் செயல்பட்ட தீவிர வாத மையங்கள் பாகிஸ்தானில் உள்ள காலிஸ்தான் ஜிந்தாபாத் படை மற்றும் காலிஸ்தான் விடுதலைப் படை ஆகியவற்றின் உதவியால் உருவானவை. தாக்குதல் நடத்த இவை சதி செய்ததாக தெரிகிறது,
ஸ்பெயின் மற்றும் பிரிட்டனில் உள்ள தீவிரவாத சக்திகள் இந்த மையங்களை ஒருங்கிணைத்து நிதி உதவி செய்தன.
இந்த மையங்களை காலிஸ் தான் ஜிந்தாபாத் படை தலைவர் ரஞ்சித்சிங், காலிஸ்தான் விடு தலைப்படை தலைவர் ஹர்மீந்தர் சிங் மின்டு ஆகியோர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
ஜம்முவிலும் பஞ்சாபிலும் தீவிர வாதத்தை மீண்டும் உயிர்ப்பிக் கவே காலிஸ்தான் குழுக்கள் ஜம்மு வில் தீவிரவாத மையங்களை அமைத்திருக்கலாம் என போலீ ஸார் தெரிவித்தனர்.