ஜார்க்கண்டில் 19 ஆயிரம் ஏக்கர் சட்டவிரோத கஞ்சா பயிர் அழிப்பு

ஜார்க்கண்டில் 19 ஆயிரம் ஏக்கர் சட்டவிரோத கஞ்சா பயிர் அழிப்பு

Published on

ராஞ்சி: ஜார்க்கண்டில் கடந்த 2 மாதங்களில் சுமார் 19 ஆயிரம் ஏக்கர் சட்டவிரோத கஞ்சா பயிர் அழிக்கப்பட்டு, 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:

ஜார்க்கண்டில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக சட்டவிரோத கஞ்சா சாகுபடிக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் கடந்த ஜனவரி முதல் இதுவரை 19,086 ஏக்கர் பரப்பரளவிலான சட்டவிரோத கஞ்சா பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சத்ரா, குன்ட்டி, லதேகார், ராஞ்சி, பலாமு, சாய்பாசா, சரைகேலா, ஹசாரிபாக் ஆகிய மாவட்டங்கள் கஞ்சா சாகுபடியால் பாதிக்கப்பட்டுள்ளன. குன்ட்டி மாவட்டத்தில் மட்டும் 10,520 ஏக்கர் பாப்பி பயிர் அழிக்கப்பட்டது. இதையடுத்து ராஞ்சி மாவட்டத்தில் 4,624 ஏக்கர் பயிர்கள் அழிக்கப்பட்டன.

ஜார்க்கண்டில் மார்ச் 15-ம் தேதிக்குள் கஞ்சா பயிர்களை 100 சதவீதம் அழிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in