வரும் ஆண்டுகளில் 20 ஆயிரம் விமானிகள் தேவை: மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தகவல்

வரும் ஆண்டுகளில் 20 ஆயிரம் விமானிகள் தேவை: மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: விமானிகளுக்கு மின்னணு பணியாளர் உரிமம் (இபிஎல்) வழங்கும் பணியை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு நேற்று டெல்லியில் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “இணைப்பை ஏற்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு விமானப் போக்குவரத்து முதுகெலும்பாக இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி, 157 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்கள் நம் நாட்டில் இருக்கும். இந்தியாவுக்கு வரும் ஆண்டுகளில் 20 ஆயிரம் விமானிகள் தேவைப்படுவார்கள்

விமானிகளுக்கு இபிஎல் வழங்குவது, சிவில் விமானப் போக்குவரத்தை நவீனமயமாக்குவது மட்டுமின்றி திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டுக்கான முக்கிய நடவடிக்கையாக இருக்கும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in