சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு 136 ஆண்டு கடுங்காவல்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு 136 ஆண்டு கடுங்காவல்
Updated on
1 min read

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கேரளத்தைச் சேர்ந்த நபருக்கு 136 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கடையாணிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் எம்.கே.ரெஜி(52). இவர் கடந்த 2023-ம் ஆண்டு மே 31-ம் தேதி தன் வீட்டுக்கு அருகிலுள்ள சிறுமி ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அந்த பெண், சினிமாவில் நடிப்பதற்காக கோட்டயம் வந்திருந்தார். இந்நிலையில் சிறுமியின் வீட்டுக்குச் சென்ற ரெஜி, அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோட்டயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு எரட்டுப்பெட்டா விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ரெஜிக்கு 136 கடுங்காவல் தண்டனை, ரூ.1,97,500 அபராதத்தை விதித்து நீதிபதி ரோஷன் தாமஸ் தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோஸ் மேத்யூ தாயில் ஆஜரானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in