எல்லையில் எந்தவொரு சூழலையும் இந்திய ராணுவம் எதிர்கொள்ளும்: காஷ்மீர் துணைநிலை ஆளுநர் உறுதி

எல்லையில் எந்தவொரு சூழலையும் இந்திய ராணுவம் எதிர்கொள்ளும்: காஷ்மீர் துணைநிலை ஆளுநர் உறுதி
Updated on
1 min read

எல்லையில் எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் முழு ஆற்றல் இந்திய ராணுவத்துக்கு உள்ளது என ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறினார்.

ஜம்முவில் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி ஒன்றை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, எல்லையில் சமீப காலமாக அதிகரித்து வரும் தாக்குதல்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்,

இதற்கு மனோஜ் சின்ஹா பதில் அளிக்கையில், “எல்லையில் எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் முழு ஆற்றலுடன் இந்திய ராணுவம் உள்ளது. எதிரிகளுக்கு உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இதில் பாகிஸ்தான் தரப்பில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸாரும் பிற பாதுகாப்பு படையினரும் மிகவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். தீவிரவாதத்தை ஒழித்துக்கட்டவும் இந்த சூழலை முடிவுக்கு கொண்டு வரவும் அவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் எந்த தொய்வும் இருக்காது. ஏனெனில் ஜம்மு-காஷ்மீரில் அமைதியை பேணுவதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

முன்னதாக நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளின் சமூக- பொருளாதார வளர்ச்சிக்காக ஜம்மு காஷ்மீர் பாடுபட்டு வருகிறது. சமமான வளர்ச்சி மற்றும் சமூக- பொருளாதார மாற்றத்துக்கான திறவுகோலாக இந்த முயற்சிகள் இருக்கும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in