Published : 14 Feb 2025 10:24 AM
Last Updated : 14 Feb 2025 10:24 AM
புதுடெல்லி: இந்தியா டுடே - சி வோட்டர் இணைந்து கடந்த ஜனவரி 2 முதல் பிப்ரவரி 9 வரை நாட்டின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் மூட் ஆப் தி நேஷன் (MOTN) என்ற பெயரில் கருத்துக்கணிப்பு நடத்தின. இதில் 1,25,123 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு மக்களிடையே ஆதரவு பெருகியிருப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் என்டிஏ 292 இடங்களில் வென்றது. 44 சதவீத வாக்குகளை பெற்றது. பாஜக பெரும்பான்மை பெறாததால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில், இன்றைய தேதியில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றால் பாஜக மட்டும் 281 இடங்களை பெற்று பெரும்பான்மை பெறும், என்டிஏ 343 இடங்களை பெறும். அதன் வாக்கு சதவீதம் 3% உயர்ந்து 47% ஆக இருக்கும்.
இதுபோல் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி கடந்த ஆண்டு தேர்தலில் 232 இடங்களை பெற்றது. இதில் காங்கிரஸ் மட்டும் 99 இடங்களை பெற்றது. இன்றைய தேதியில் தேர்தல் நடைபெற்றால் அக்கூட்டணியின் தொகுதி எண்ணிக்கை 188 ஆக குறையும். இதில் காங்கிரஸ் 78 இடங்களை மட்டுமே பெறும்.
திமுக செல்வாக்கு: தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி 47%, பாஜக கூட்டணி 18%, அதிமுக கூட்டணி 23% வாக்குகள் பெற்றன. இன்றைய தேதியில் தேர்தல் நடந்தால் திமுக கூட்டணி 5% உயர்ந்து 52 சதவீதமும் பாஜக கூட்டணி 3% உயர்ந்து 21 சதவீதமும் அதிமுக கூட்டணி 3% குறைந்து 20 சதவீதமும் வாக்குகள் பெறும் எனத் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT