Published : 14 Feb 2025 07:32 AM
Last Updated : 14 Feb 2025 07:32 AM

லோக்பால் அமைப்பில் 2,426 ஊழல் வழக்குகள்: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: லோக்பால் அமைப்பில் இதுவரை 2,426 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் லோக்பால் அமைப்பு நிறுவப்பட்டு முழுமையாக செயல்பட்டு வருகிறது. இவற்றில் இதுவரை 2,426 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், கடந்த ஜனவரி 31-ம் தேதி நிலவரப்படி 2,350 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.

இப்போது லோக்பால் அமைப்பில் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர்களில் 3 பேர் நீதித் துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் 3-வது பிரிவின்படி லோக்பால் அமைப்பில் தலைவர் மற்றும் அதிகபட்சமாக 8 பேர் உறுப்பினர்களாக இருக்கலாம். உறுப்பினர்களில் பாதி பேர் நீதித் துறையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x