Last Updated : 01 Jul, 2018 12:33 PM

 

Published : 01 Jul 2018 12:33 PM
Last Updated : 01 Jul 2018 12:33 PM

5-வது முறையாக நீட்டிப்பு: ஆதார் கார்டுடன், பான் எண்ணை இணைக்க 2019, மார்ச் 31 வரை அவகாசம்

ஆதார் கார்டுடன், பான் எண்ணை இணைக்கும் காலஅவகாசம் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை நீட்டித்து மத்திய நேரடிவரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைப்பது 5 முறையாக நீட்டிக்கப்படுகிறது. வருமானவரிச் சட்டம் பிரிவு119ன் கீழ் இந்த உத்தரவு நேற்று நள்ளிரவுபிறப்பிக்கப்பட்டது.

வருமான வரி செலுத்துவோர் தங்களின் பான்கார்டு எண்ணை, ஆதார் கார்டுடன் இணைப்பதை மத்திய கட்டாயமாக்கி இருந்தது. வருமான வரிச்சட்டம் பிரிவு 139ன் கீழ், கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை முதல் கட்டாயமாகும். அதன்படி கடந்த 4 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இறுதி கெடுவாக கடந்த மாதம் 30ம் தேதி வரை வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூலை 31, ஆகஸ்ட் 31, டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் மாத புள்ளிவிவரப்படி, மொத்தம் உள்ள 33 கோடி பான் எண்களில் 16.65 கோடி பான் எண்கள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த அவகாசம் கடந்த மார்ச் 27-ம் தேதியோடு முடிந்த நிலையில், ஜுன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு நேற்றுடன் முடிந்தது. இந் நிலையில், நேற்றிரவு மத்திய நேரடி வரிகள் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

மத்திய அரசின் பல்வேறு சமூகநிதியுதிதிட்டங்களைப் பெறவும், சேவைகளைப் பெறவும் ஆதார் கார்டை இணைப்பது அவசியமாக எனத் தொடரப்பட்ட வழக்கிலும், ஆதாருக்கு சட்டஅங்கீகாரம் வழங்குவது குறித்த வழக்கிலும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசனஅமர்வு தீர்ப்பு வழங்கும்வரை இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x