

லக்னோ: உத்தராகண்ட் மாநிலம் பவுரி மாவட்டம் பஞ்சூர் பகுதி தங்கர் நகரிலுள்ள ஆரம்பப் பள்ளியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் படித்தார். இந்நிலையில் அந்த பள்ளிக்கு நேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்றார். இந்த பள்ளியில்தான் அவர் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வரை பயின்றார். அவரை பள்ளி நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தைச் சுற்றிப் பார்த்த முதல்வர் யோகி ஆதித்யநாத், பள்ளியில் இருக்கும் வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களிடையே அவர் கூறும்போது, “இந்தப் பள்ளியில் தற்போது அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளன. இங்கு கம்ப்யூட்டர் வகுப்புகள், ஆன்-லைன் வகுப்புகள், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள், நவீன அறிவியல் ஆய்வுக் கூடம் ஆகியவை உள்ளன.
எனவே, மாணவர்களும், பெற்றோரும் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதன் மூலம் மாணவர்களின் எதிர்காலம் மேம்படும். நாட்டின் வளர்ச்சிக்காக மாணவர்கள் பாடுபடவேண்டும்" என்றார்.