அவசரநிலை காலத்தில் பேச்சுரிமையை நசுக்கியது காங்கிரஸ்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

அவசரநிலை காலத்தில் பேச்சுரிமையை நசுக்கியது காங்கிரஸ்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி அவசரநிலை காலத்​தில் பேச்​சுரிமையை நசுக்​கியது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்​றம்​சாட்டி உள்ளார்.

நாடாளு​மன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், கடந்த சில தினங்​களாக மாநிலங்​களவை​யில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீது விவாதம் நடைபெற்​றது. இந்த விவாதத்​துக்கு பதில் அளித்து பிரதமர் மோடி நேற்று பேசி​ய​தாவது: குடியரசுத் தலைவரின் உரை நமக்கு உத்வேகம் அளிப்​ப​தாக​வும் பயனுள்ள​தாக​வும் இருந்​தது. அத்துடன் நாம் அனைவரும் முன்னோக்கி செல்​வதற்கான வழியை​யும் காட்​டியது. இது தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்​கட்சி உறுப்​பினர்கள் தங்கள் கருத்துகளை தெரி​வித்​தனர்.

‘நம் அனைவருடைய வளர்ச்​சிக்காக நாம் அனைவரும் இணைந்து செயல்​படு​வோம்’ என்பது​தான் இந்த அரசின் குறிக்​கோள். எனவே​தான், நாம் இந்த இடத்​தில் இருப்​ப​தற்கான வாய்ப்பை நாட்டு மக்கள் வழங்கி உள்ளனர். குடும்​பம்​தான் முதல் என்பது காங்​கிரஸ் கட்சி​யின் மாதிரி. அக்கட்​சிக்கு ‘நம் அனைவருடைய வளர்ச்​சிக்காக நாம் அனைவரும் இணைந்து செயல்​படு​வோம்’ என்ற முழக்​கத்​தில் நம்பிக்கை இல்லை. இது அவர்​களின் சிந்​தனைக்கு அப்பாற்​பட்​டது. இதை அவர்​களிடம் எதிர்​பார்ப்பது தவறு.

நாட்டு மக்கள் நமது வளர்ச்சி மாதிரியை பரிசோ​தித்து, புரிந்​து​கொண்டு ஆதரித்​துள்ளனர். தேசத்​துக்கே முன்னுரிமை என்பது நமது வளர்ச்​சிக்கான மாதிரி ஆகும். காங்​கிரஸ் ஆட்சி​யின்​போது, அனைத்து தரப்​பினரை​யும் சமாதானப்​படுத்த முயற்சி மேற்​கொள்​ளப்​பட்​டது. இதுதான் அவர்​களுடைய அரசியல் மாதிரி. கடந்த 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அனைவரை​யும் திருப்​திபடுத்த வேண்​டும் என்ற நோக்​கத்​தில் அரசு செயல்​பட்டு வருகிறது.

எனது தலைமையிலான மத்திய அரசு, விளிம்​புநிலை மக்களுக்கு (ஓபிசி), பெண்கள் மற்றும் திருநங்​கைகள் மேம்​பாட்டுக்காக செயல்​பட்டு வருகிறது. காங்​கிரஸ் கட்சி சமூகத்​தில் சாதி எனும் விஷத்தை பரப்புகிறது. ஒரு காலத்​தில் பாபாசாஹிப் அம்பேத்​கருக்கு எதிராக காங்​கிரஸ் கட்சி வெறுப்பை பரப்​பியது. அவருக்கு எதிராக சதி செய்​தது. அவருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பது பற்றிகூட பரிசீலிக்க​வில்லை. ஆனால், இப்போது ‘ஜெய் பீம்’ என்று முழங்க வேண்டிய நிலைக்கு அக்கட்சி தள்ளப்​பட்டுள்​ளது.

அரசியல் சாசனத்​துக்கு காங்​கிரஸ் கட்சி ஒருபோதும் மரியாதை கொடுக்க​வில்லை. ஆனால் இன்று நமது அரசி​யலமைப்பு சட்டத்தை உருவாக்​கிய​வர்​களுக்கு மரியாதை கொடுத்து, அவர்​களிட​மிருந்து உத்வேகம் பெற்று நாம் முன்னேறி வருகிறோம். காங்​கிரஸ் கட்சி அதிகாரத்​துக்காக அவசரநிலையை பிரகடனம் செய்​தது. இதை நாடே அறியும். அவசரநிலை அமலில் இருந்த​போது, அரசி​யல் சாசனம் எப்படி அவ​ம​திக்​கப்​பட்​டது, பேச்​சுரிமை எப்​படி நசுக்​கப்​பட்​டது என்​ப​தைப்​ பார்​த்​தோம்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in