Published : 06 Feb 2025 07:18 AM
Last Updated : 06 Feb 2025 07:18 AM
காக்கிநாடா: ஆந்திராவில் சுமார் 4 லட்சம் பண்ணை கோழிகளுக்கு மர்ம நோய் பரவி உள்ளது. இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் தற்போது பண்ணை கோழிகளுக்கு மர்ம நோய் பரவி வருகிறது. இதனால் இப்போதைக்கு சுமார் 4 லட்சம் கோழிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த கால்நடைத் துறை அதிகாரிகள், கோழிப் பண்ணைகளில் ஆய்வு நடத்தி, கோழிகளிடம் ரத்த மாதிரியை சேகரித்து, விஜயவாடா மற்றும் போபால் போன்ற இடங்களில் உள்ள பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆந்திர மாநில கால்நடை துறை இயக்குநர் டாக்டர் தாமோதர் நாயுடு கூறும்போது, "கோழிப் பண்ணை உரிமையாளர்கள் இறந்த கோழிகள், அதன் உடல் பாகங்களை வெளிப்படையாக ஏதாவது ஒரு இடத்தில் கொட்டுவதால் இதுபோன்ற வைரஸ் ஏற்படுகிறது. பண்ணை உரிமையாளர்கள், கறிக்கோழி வியாபாரிகளின் அலட்சியப் போக்கே இதுபோன்ற வைரஸ்களுக்கு காரணம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT